சிவந்திபட்டியில் மரக்கன்றுகள் நட்ட மாணவர்கள்
சிவந்திபட்டியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி சார்பில் சிவந்திபட்டி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்து வருகிறது. முகாமில் நேற்று முன்தினம் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. சிவந்திபட்டி நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் ராஜ்குமார் வரவேற்று பேசினார். பட்டதாரி ஆசிரியர் கிறிஸ்டோபர் 'தமிழின் சிறப்புகள்' என்ற தலைப்பிலும், முதுகலை ஆசிரியர் கனகராஜ் 'சேமிப்பின் நன்மைகள்' என்ற தலைப்பிலும் பேசினர். சிவந்திபட்டி அய்யனார் கோவில் பகுதி மற்றும் கிராம பொது. இடங்களில் மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டனர். மாணவர் கேசவன் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், மாவட்ட உதவி திட்ட அலுவலர் முத்து கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.