மதுக்கடையை மாற்றக்கோரி மாணவர்கள், பெற்றோர்கள் முற்றுகை

மதுக்கடையை மாற்றக்கோரி மாணவர்கள், பெற்றோர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-01 18:00 GMT

நாட்டறம்பள்ளி பகுதியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பூபதி தெரு பகுதியில் அரசு மதுபான கடை மற்றும் அரசு அனுமதியின்றி பார் இயங்கி வருகிறது. இந்த வழியாகத்தான் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ- மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இந்த பாரில் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி தமிழ்நாடு அரசு மது மற்றும் கர்நாடக அரசு மது பாக்கெட்டுகள் விற்பனை ஆகிறது. எனவே பள்ளி மாணவ மாணவிகள் இந்த வழியாக செல்ல மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது குறித்து பேரூராட்சி கவுன்சிலர் இல.குருசேவ், கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அரசு பள்ளி மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் பார் மற்றும் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி முற்றுகையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்