சரக அளவிலான ஆக்கி போட்டியில் அரூர் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

சரக அளவிலான ஆக்கி போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.;

Update: 2023-09-26 19:30 GMT

அரூர்:-

அரூர் சரக அளவிலான ஆக்கி விளையாட்டு போட்டி அரூர் குறு மைதானத்தில் நடந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த பல்வேறு அணிகள் போட்டியில் பங்கேற்றன. அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இளையோர் பிரிவில் முதலிடத்தையும், மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பிரிவில் 2-ம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கர், பழனிதுரை, முருகேசன், வெங்கடாசலம் ஆகியோரையும் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்