செய்யது அம்மாள் கல்லூரி மாணவர்கள் முதலிடம்
ஆக்கி போட்டியில் செய்யது அம்மாள் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.;
பனைக்குளம்.
அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆக்கி போட்டிகள் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகளை செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒருங்கிணைத்து நடத்தியது.போட்டிகளை மாவட்ட இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டு துறை அலுவலர் தினேஷ் குமார், அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார், செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியினர் முதல் பரிசையும், சுழற்கோப்பையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். 2-ம் பரிசை அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரியும், 3-ம் பரிசை அழகப்பா அரசு கலை அறிவியல் கல்லூரியும், 4-ம் பரிசை அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி அணியினர் பெற்றனர். பெண்களுக்கான போட்டிகளில் முதல் 3 பரிசுகளையும், சுழற் கோப்பையையும் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி அணியினர் பெற்றனர். 2-ம் பரிசை அழகப்பா அரசு கலை அறிவியல் கல்லூரியும், 3-ம் பரிசை சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியும், 4-ம் பரிசை சேதுபதி அரசு கல்லூரி அணியினரும் பெற்றார்கள்.
வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் வழங்கினார். இதில் தமிழ்நாடு ஆக்கி சங்கத்தின் இணைச்செயலாளர் கிழவன் சேதுபதி, அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரியின் முதல்வர் முரளி ராஜன், மாவட்ட விளையாட்டு ஆக்கி பயிற்றுனர் மணிகண்டன், அழகப்பா பல்கலைக்கழக இணைவுக் கல்லூரிகளின் ஆக்கி விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார், அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர்கள் மணிமுத்து, மனோகரி, சவேரியார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்கள். நடுவர்களாக சுரேஷ், தாமரைக்கண்ணன், அருணகிரி, சரவணக்குமார், கார்த்திக் ஆகியோர் செயலாற்றினார்கள். போட்டிகளை தமிழ்த்துறை பேராசிரியர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார்.