முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
நல்லம்பள்ளி அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நல்லம்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1981-1982-ம் ஆண்டு 10-ம் வகுப்பில் 55 மாணவர்கள் படித்தனர். அதன் பின்னர் மேற்படிப்பிற்காக சிலர் மற்ற பள்ளிகளுக்கும், மற்றவர்கள் வெளி மாவட்டங்களுக்கும் சென்று விட்டனர். தற்போது அப்பள்ளியில் படித்தவர்கள் பலரும் அரசு பணிகளில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாணவர்களில் ஒருவரான வீரமணி என்பவர் அனைவரிடமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வரும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிலையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களையும் வரவழைத்து அவர்களிடம் ஆசி பெற்றனர்.