சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தால் மாணவர்கள் அவதி மழைநீரை தடுக்க மேற்கூரை மீது தார்பாய்

திருவாலங்காடு அருகே சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மழைநீரை தடுக்க மேற்கூரை மீது தார்பாய் கொண்டு மூடி இருக்கும் அவலம்.

Update: 2023-09-01 07:30 GMT

திருவாலங்காடு,

திருவாலங்காடு ஒன்றியம் கூர்மவிலாசபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் ஓடு போட்ட வகுப்பறைகள் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது பள்ளி கட்டிடம் மற்றும் மேற்கூரை ஓடுகள் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மழை நீர் வகுப்பறையில் கசிந்து, மாணவர்கள் படிக்க முடியாமல் அவதி அடைந்து வருகிறது.

பள்ளி கட்டிடத்தை சீரமைக்க பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். தற்காலிகமாக பள்ளியின் மேற்கூறையின் மீது தார்ப்பாய் கொண்டு ஆசிரியர்கள் மூடியுள்ளனர். பள்ளி மேற்கூரை மீது சேதம் அடைந்த ஓடுகள் அடிக்கடி சரிந்து விழுவதால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாணவர்களின் நலனை கருத்தில் உடனடியாக சேதமடைந்த கூர்மவிலாசபுரம் தொடக்க பள்ளிக்கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்