திண்டுக்கல்லில் 8-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் மாயம்

திண்டுக்கல்லில் 8-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் மாயமாகினர்.;

Update: 2022-11-14 17:03 GMT

திண்டுக்கல்லில், திருச்சி சாலையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் நந்தவனப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 மாணவிகள் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து வெளியே சென்ற 4 மாணவிகளும் வீட்டுக்கு செல்லவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு தேடி வந்தனர்.‌ அங்கு பள்ளி முடிந்து அனைத்து மாணவிகளும் வெளியே சென்றது தெரியவந்தது. இதையடுத்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் பள்ளிக்கு சென்று நிர்வாகிகளிடம் விசாரித்தனர்.

அதேபோல் மாணவிகளின் தோழிகள் சிலரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.‌ அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் மாயமான 4 மாணவிகளையும் போலீசார் தேடி வருகின்றனர். பள்ளி முடிந்து வெளியே சென்ற மாணவிகள் வீட்டுக்கு செல்லாமல் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்