தேசிய அளவில் கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை
தேசிய அளவில் கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.;
ஸ்ரீவில்லிபுத்தூர்
நாகர்கோவிலில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அளவில் கராத்ேத போட்டி நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் சோட்டோகான் கராத்தேயின் தலைமை பயிற்சியாளர் சென்சாய் செபஸ்தியான் தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் லயன்ஸ் பள்ளி மாணவர்கள் கிறிஸ்வின் முதல் இடமும், திவ்ய காளிதாசன் 2-வது இடமும், சஞ்சய் 3-வது இடமும், மகரீஷி சிபி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் லோகேஷ் முதல் இடமும், கோபிநாத் 3-வது இடமும், ஜி.எஸ். இந்து மேல்நிலைப்பள்ளி ஜனார்த்தனன் முதல் இடமும், திரு இருதய கான்வென்ட் பள்ளி செரீ ஆல்வரஸ் 2-வது இடமும், வள்ளுவர் வித்யாலயா பள்ளி குருசக்ரவர்த்தி 3-வது இடமும் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.