பர்கூர்:
பர்கூர் அருகே உள்ள மயிலாடும்பாறையில் அகழாய்வு பணி நடந்தது வருகிறது. இந்த பணியை காவேரிப்பட்டணம் அருகே உள்ள சவுளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 40 பேர் மற்றும் 4 ஆசிரியர்கள் பார்வையிட்டனர். மேலும் மாணவ-மாணவிகள் வரலாற்று ஆய்வாளர் சுகவனம் தலைமையில் களப்பணி மேற்கொண்டு பண்டைய கால ஓடுகளை சேகரித்தனர். அப்போது தொல்லியல் அகழாய்வு, வரலாறு குறித்து மாவட்ட தொல்லியல் அலுவலர் பரந்தாமன் மாணவ-மாணவிகளுக்கு விளக்கி கூறினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு வினாடி, வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் மன்னர் ராஜராஜன் வெளியிட்ட காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.