மாணவன் தற்கொலை

சிவகாசியில் தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.;

Update: 2022-07-04 19:34 GMT

சிவகாசி, 

சிவகாசி வெல்லம்சாமியார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீமுருகன். இவரது மகன் ஸ்ரீராம் கார்த்திகேயன் (வயது 15). இவன் சிவகாசியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

வீடு திரும்பிய ஸ்ரீமுருகன், மகன் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மகனை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர், ஸ்ரீராம் கார்த்திக்கேயன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீமுருகன் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்