வேன் மோதி மாணவி பலி; தந்தை படுகாயம்
வேன் மோதி மாணவி பலியானார். மாணவியின் தந்தை படுகாயம் அடைந்தார்.;
புள்ளம்பாடி ஒன்றியம் கோவாண்டகுறிச்சி ஊராட்சி வடுகர் பேட்டை வீரமாமுனிவர் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் கோபிகா (வயது11). இவர் வடுகர்பேட்டை புனித மரியன்னை நடுநிலை பள்ளியில் படித்து வந்தார். நேற்று குமார் கோபிகாவை பள்ளியல் விடுவதற்காக வடுகர்பேட்டை பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, புள்ளம்பாடியில் இருந்து கல்லக்குடியில் உள்ள தனியார் பள்ளிக்கு பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வந்த வேன் குமார் மீது மோதியது.இதில் குமார், கோபிகா ஆகிய இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.இதில் மாணவி கோபிகா வேனின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த குமாரை அப்பகுதியினர் மீட்டு லால்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.