சென்னை ஐஐடியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்;

Update: 2023-02-14 08:29 GMT

சென்னை,

சென்னை ஐஐடியில் படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கிப் படித்துவந்த ஸ்ரீவன் சன்னி என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கில் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆராய்ச்சி படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாத காரணத்தால் மாணவர் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்றொரு மாணவர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்