மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மாணவி சாவு

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மாணவி இறந்தார்.;

Update: 2023-01-28 19:10 GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பாட்னாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 32). இவர் கடந்த 23-ந்தேதி திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே நாகமங்கலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இதேபோல் புதுக்கோட்டை அருகே உள்ள வெள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (35), தனது அண்ணன் கணேசனின் மகள்கள் முத்தழகி (16), முத்துமாரி (12) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். நாகமங்கலம் அருகே வந்தபோது, இருவரது மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் காளிமுத்து, பாலாஜி ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த முத்துமாரி, முத்தழகி ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் மாணவி முத்துமாரி நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்