மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் சாவு

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-10-07 22:15 GMT

தக்கலை:

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் பரிதாபமாக இறந்தார்.

9-ம் வகுப்பு மாணவன்

குலசேகரம் அருகே உள்ள மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் தருண் (வயது 15). கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியபடி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

காலாண்டு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த தருண் கடந்த 29-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த மேக்லின் ஜோஸ் என்பவருடன் தக்கலையை அடுத்த மருந்துக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து மாலையில் புறப்பட்ட போது மோட்டார் சைக்கிளை மேக்லின் ஜோஸ் ஓட்ட தருண் பின்னால் உட்கார்ந்திருந்தார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் சாவு

சாண்டம் பகுதியை சென்றடைந்த போது சாலையில் கிடந்த மணலால் மோட்டார் சைக்கிள் சறுக்கியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் தருணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றுமுன்தினம் தருண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து தொடர்பாக கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்