ஆற்றில் மூழ்கி மாணவன் சாவு

கும்பகோணம் அருகே ஆற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்தான்.

Update: 2023-08-15 20:56 GMT

கும்பகோணம்;

கும்பகோணம் அருகே ஆற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்தான்.

பள்ளி மாணவன்

கும்பகோணம் அருகே உள்ள சோழன் மாளிகை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருைடய மகன் அருள்(வயது12). 7-ம் வகுப்பு படித்து வந்த அருள் நேற்று காலை தனது பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள பள்ளிக்கு சென்றான்.பள்ளியில் விழா முடிந்த உடன் அருள் தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து பட்டீஸ்வரம் திருமலைராஜன் ஆற்றுக்கு குளிக்க சென்றான்.

பரிதாப சாவு

ஆற்றில் அருள் குளித்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டான். அப்போது அந்த வழியாக சென்ற சிலர் அருளை காப்பாற்ற ஆற்றில் குதித்து அவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் கரைக்கு கொண்டு வந்த சில நிமிடங்களில் அருள் பரிதாபமாக உயிரிழந்தான். .து குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்