மாணவியர் பேரவை தேர்தல்

வாசுதேவநல்லூர் வியாசா மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை தேர்தல் நடந்தது.;

Update: 2023-07-07 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படியே அனைத்தும் நடந்தேறின. சின்னங்கள் மட்டுமே கல்வி மற்றும் துறை சார்ந்தது. 3 நாட்களுக்கு முன்பு வேட்பாளர்கள் அவரவர் துறை மாணவியருடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். இருநாட்கள் ஓட்டுக்கள் சேகரித்தனர். மொத்தம் 9 வாக்குச்சாவடிகளில் மாணவியர் வாக்களித்தனர். அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன.

இதில் ஹரிஸ்மிதா தலைவியாகவும், ஆசன் பீவி உதவித் தலைவியாகவும், கார்த்திகா விளையாட்டுத்துறை செயலாளராகவும், ஸ்வேதா உதவி செயலாளராகவும் கணிசமான ஓட்டுக்கள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தேர்தல் கமிட்டியினர் செய்திருந்தனர். வெற்றி பெற்றவர்களை கல்லூரி சேர்மன் வெள்ளத்துரைப்பாண்டியன், நிர்வாக இயக்குனர், ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்