மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
பொக்காபுரம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கூடலூர்,
மசினகுடி அருகே பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் உயர்நிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியின் போது பள்ளியில் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பதாகைகள் ஏந்தியவாறு நண்பனை பள்ளிக்கு அழைப்போம் என மாணவர்கள் கோஷம் எழுப்பியபடி சென்றனர். கரகாட்டம், பறை இசைத்து பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முடிவில் தொட்லிங்கி பகுதியில் தலைமை ஆசிரியர் கலாவதி தலைமையில் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் பள்ளி வயது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கவும், அதனால் கிடைக்கும் சலுகைகள் குறித்தும் பேசினார். முன்னதாக ஆசிரியை சுமதி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.