மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

கடையம் அருகே மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2023-04-27 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று தமிழக அரசின் வழிகாட்டுதல்படி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடையம் வட்டார கல்வி அலுவலர் குருசாமி தலைமை தாங்கினார். பேரணியில் முதலியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முகைதீன் பிவி ஹசன், துணைத்தலைவர் பாஷில் அசரப் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

பேரணி முடிந்ததும் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்தது. புதிதாக ஏராளமான பெற்றோர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர். குழந்தைகளுக்கு மரக்கன்றுகளும், வண்ண வண்ண பலூன்களும் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் கனகராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்