மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
குடவாசல்:
குடவாசல் ஒன்றியம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் சார்பில் நேற்று 2022-23-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தொடக்கக்கல்வி அலுவலர்கள் குமரேசன், விஜயலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு பேரூராட்சி உறுப்பினர் மகேஷ் முன்னிலை வகித்தார். ஊர்வலம் அகரஓகை பாலத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக பஸ் நிலையத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியவாறு 5 வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தினர்.