ஈரோட்டில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்;

Update: 2023-05-17 21:01 GMT

ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் துளசிமணி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தமிழ்நாடு அரசு கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றிய நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்றும், ரேஷன் கடைகளிலும், ஊட்டச்சத்து மையங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை நிறுத்தக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் பொன்னுசாமி, மாவட்டக்குழு தலைவர் குப்புசாமி உள்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்