6-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்
தேன்கனிக்கோட்டை அருகே கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 6-வது நாளாக கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.;
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கொரட்டகிரி கிராமத்தின் அருகே 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அதிகாரிகள், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கிராம மக்கள் ஊரை காலி செய்து கால்நடைகள், குழந்தைகளுடன் வெளியேறி கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களுக்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கிராம மக்கள் நேற்று 6-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.