ஓசூர் அருகே கர்நாடக எல்லையில்கன்னட அமைப்பினர் காலிக்குடங்களைஉடைத்து போராட்டம்சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கன்னட அமைப்பினர் காலிக்குடங்களை உடைத்து போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-23 19:45 GMT

ஓசூர்

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கன்னட அமைப்பினர் காலிக்குடங்களை உடைத்து போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னட அமைப்பினர் போராட்டம்

காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது. இதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கர்நாடக ரக்ஷன வேதிகே (பிரவீன் ஷெட்டி அணி) என்ற கன்னட அமைப்பின் சார்பில் நேற்று ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாத நிலையிலும், தொடர்ந்து தண்ணீர் கேட்பதாக தமிழக அரசை கண்டித்து அவர்கள் அத்திப்பள்ளி சர்க்கிளில் இருந்து, மாநில தலைவர் பிரவீன் ஷெட்டி தலைமையில் காலிக்குடங்கள், மண் பானைகளுடன் தமிழக எல்லையை நோக்கி வந்தனர். அவர்களை கர்நாடக போலீசார் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தினர்.

சாலை மறியல்

இதைத்தொடர்ந்து ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அத்திப்பள்ளி வளைவு அருகே கன்னட அமைப்பினர் கலிக்குடங்கள் மற்றும் மண் பானைகளை உடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை தீ வைத்து எரித்தனர். தொடர்ந்து கன்னட அமைப்பினர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 120 பேரை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக, தமிழக பஸ்கள் மாநில எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், இயல்புநிலை திரும்பியதும் போக்குவரத்து சீரடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்