ரசாயனம் கலந்த உணவு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை

ரசாயனம் கலந்த உணவு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.;

Update: 2023-05-02 18:45 GMT

தேவகோட்டை

ரசாயனம் கலந்த உணவு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

விழிப்புணர்வு முகாம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருப்பத்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மஹாலில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உணவு தயாரிப்பதற்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி தலைமை தாங்கினார். தேவகோட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் மேஸ்திரி மாணிக்கம் மற்றும் உணவு உற்பத்தியாளர்கள், கடை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு முகாமில் உணவு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் வருடாந்திர கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். உணவகங்களில் ஒருமுறைதான் எண்ணெயை பயன்படுத்த வேண்டும். கடைகளில் விற்பனை செய்யும் உணவு பொருட்களின் காலாவதி தேதியை சரி பார்க்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

பேக்கரியில் கேக் செய்யும் அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உணவகம், பேக்கரியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்களை ரசாயனம் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு மீறி ரசாயனம் செய்து பழங்களை பழுக்க வைத்து விற்பனை சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்