தெருமுனை கூட்டம்
கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் தெருமுனை கூட்டம் நடந்தது.;
அச்சன்புதூர்:
காயிதே மில்லத் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் தெருமுனை கூட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது.
நகர தலைவர் செய்யது மசூது தலைமை தாங்கினார். நகர செயலாளர் அயூப்கான் வரவேற்றார். மாநில இளைஞர் லீக் துணை செயலாளர் ஹபிபுல்லா தொடக்க உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து `இன்றைய அரசியல் சூழலில் இந்தியா' என்ற தலைப்பில் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை அப்துல் மஜீத் சிறப்புரையாற்றினார். இதில் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் நகராட்சி உறுப்பினர் அக்பர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் திவான் மைதீன் நன்றி கூறினார்.
---------