புயல் எச்சரிக்கை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் அவசர கால ஏற்பாடுகள் - விமான நிலைய ஆணையம் உத்தரவு

புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசர கால ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-07 18:12 GMT

சென்னை,

காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், விமான நிலையத்தில் உள்ள அனைத்து அவசர கால குழுக்களையும் தயார் நிலையில் வைக்க தீர்மானிக்கப்பட்டது. சிறிய ரக விமானங்களை சரியான முறையில் நங்கூரமிட்டு பாதுகாக்கவும் அறிவுறுத்தப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்