புயல் சின்னம் எதிரொலி- காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

காரைக்காலில் கடலில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.;

Update: 2022-12-06 06:41 GMT

கோப்புப்படம் 

காரைக்கால்,

வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல கூடாது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அதன்படி காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் காரைக்கால் பகுதியை சேர்ந்த 11 கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு யாரும் கடலுக்கு செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இந்த பகுதியில் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசை படகுகள் அனைத்தும் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. பைபர் படகுகள் அரசலாற்றங்கரை மற்றும் துறைமுக பகுதியில் மீனவர்கள் நிறுத்தி உள்ளனர்.

காரைக்காலில் கடலில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. எனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்