புயல் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள்
வானகிரி மீனவ கிராமத்தில் புயல் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆய்வு செய்தார்.;
திருவெண்காடு:
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக பாதுகாப்பு பணியிலில் ஈடுபட வானகிரி மீனவ கிராமத்தில் 24 தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புகுழு வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று அவர்களை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர். புயல் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி,ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் மற்றும் கிராம பஞ்சாயத்தார்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.