புயல் பாதிப்பு - இன்று முதல் சிறு வணிக கடன் முகாம்

சிறு வணிக கடன் திட்டம் முகாம் இன்று முதல் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.;

Update: 2024-01-05 01:57 GMT

சென்னை,

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறுவணிகர்களுக்கு "முதல்-அமைச்சரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்டம் " செயல்படுத்தப்பட உள்ளது.

அந்த வகையில், "சிறு வணிக கடன் திட்டம்" முகாம் 4 மாவட்டங்களிலும் இன்று முதல் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னையில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கி மூலமும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கி மூலமும் நடைபெற உள்ளது.

குறைந்த வட்டியில் அதிகபட்ச கடன் தொகை ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இக்கடனை 50 வாரங்களில் வாரந்தோறும் ரூ.200 என்ற அடிப்படையில் ஒரு வருட காலத்திற்குள் உரிய வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் அல்லது மாதந்தோறும் ரூ.1,000 வீதம் உரிய வட்டியுடன் திருப்பி செலுத்தலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்