குடிநீர் வினியோகம் நிறுத்தம்

மயிலாடுதுறையில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்;

Update: 2023-04-11 18:45 GMT

மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் குழாயில் ஏற்பட்டுள்ள பழுது சரிசெய்யும் பணி நடைபெறவுள்ளது. இதன்காரணமாக, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்