திருடப்பட்ட வாகனம் 7 மணி நேரத்தில் மீட்பு
திருடப்பட்ட வாகனம் 7 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.;
நாட்டறம்பள்ளி அடுத்த பி.பந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி ராதிகா (வயது 45) இவர் நாற்காலி வியாபாரம் செய்து வருகிறார்.
புதிய ஸ்கூட்டர் வாங்கிய அவர் வீட்டிற்கு வந்தார். வாகனத்தை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்ற அவர் அந்த வாகனம் திருடப்பட்டிருந்ததை கண்டு நாட்டறம்பள்ளி போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் மலர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நாட்டறம்பள்ளி அருகே போலீசார் வருவதைக் கண்ட திருடன் ஸ்கூட்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடினான்.
அந்த வாகனம் ராதிகாவின் வாகனம் என்பதை அறிந்து அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். திருடப்பட்ட 7 மணி நேரத்தில் வாகனம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.