விற்பனைக்கு குவிந்த கறவை மாடுகள்

பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்கு கறவை மாடுகள் குவிந்தது. ரூ.2 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றது.

Update: 2023-03-14 18:50 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கை வாரச்சந்தை நேற்று நடந்தது. வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து உயர்ரக கறவை மாடுகள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, சித்தூர், பலமநேர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். ஒரு கறவை மாடு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை விற்பனையானது.

நேற்று நடந்த மாட்டுச்சந்தையில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டன. காய் கறிகளும் விற்பனை செய்யப்பட்டன. சுமார் ரூ.2 கோடி அளவுக்கு வியாபாரம் நடைபெற்று இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்