கூட்டுறவு தையல் தொழிலாளர்களுக்கு விலைவாசிக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராயப்பன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அசோகன், மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கூட்டுறவு தையல் தொழிலாளர்களுக்கு துணி வழங்கும்போது, நாடா, பட்டன், ஜிப்பு, நூல் மற்றும் ஊசி வழங்க வேண்டும். கூட்டுறவு தையல் தொழிலாளர்களுக்கு பாரபட்சம் இன்றி துணி வழங்க வேண்டும். பென்சன்தாரர்களுக்கான தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.