விவசாயி வீட்டில் பணம் திருட்டு

தியாகதுருகம் அருகே விவசாயி வீட்டில் பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2023-05-30 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே வேங்கைவாடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் கதிர்வேல் (வயது 34) விவசாயி, இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மேல் மாடியில் தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். கீழ் வீட்டில் கதிர்வேலின் அண்ணன் பெருமாளின் மனைவி கவிதா (36) என்பவர் தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டின் பின்பக்க கதவை அவர்கள் பூட்டாமல் தூங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவில் வீட்டில் கதவு உடைப்பது போல் சத்தம் கேட்டு எழுந்த கதிர்வேல் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது கீழ வீட்டில் இருந்து மர்மநபர்கள் 2 பேர் தப்பி ஓடினர். இதையடுத்து கதிர்வேல் கீழ்வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மர்மநபர்கள், கவிதா தூங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.40 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரிந்தது.

இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்