விவசாயியிடம் வழிப்பறி; 5 பேர் கைது

விவசாயியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-01-30 18:45 GMT

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே கரந்தாநேரியை சேர்ந்தவர் சேர்மபாண்டி (வயது 35). விவசாயியான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதலைக்குளம் ரெயில்வே கேட் அருகே வந்தபோது 2 பேர் வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனையும், தங்க சங்கிலியையும் பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து மூன்றடைப்பு போலீசில் சேர்மபாண்டி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி விசாரணை நடத்தி தோட்டாக்குடியைச் சேர்ந்த இளங்கோ (28), மகேந்திரன் (22) ஆகியோரை கைது செய்தார். உடந்தையாக இருந்த தளவாய், பொன்மணி, சங்கர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்த வழிப்பறி செய்த பொருட்களையும் மீட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்