3 ஆடுகள் திருட்டு
3 ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் கீழகாலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 56). இவர் தனது வீட்டில் 3 ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவில் அவர் 3 ஆடுகளையும் வீட்டு முன் கட்டி போட்டு இருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது, ஆடுகளை காணவில்லை. நள்ளிரவில் மர்ம நபர்கள் லோடு ஆட்டோவில் வந்து ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து முருகன் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.