தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி திருட்டு
ஆலங்குடியில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தங்க சங்கிலி திருட்டு
ஆலங்குடி அருகே அரசடிபட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் மனைவி அடைக்கலமேரி (வயது 46). இவர், நேற்று அதிகாலை தனது மகள் மற்றும் மாமியாருடன் வீட்டின் வரண்டாவில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அடைக்கலமேரி 3 பவுன் தங்க சங்கிலியை கழட்டி தலையணைக்கு கீழ் வைத்து கொண்டு தூங்கி உள்ளார். இதையறிந்த மர்மநபர்கள் தலையணையை எடுத்து விட்டு, அதில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்று விட்டனர். இதையடுத்து கண்விழித்த அடைக்கலமேரி தங்க சங்கிலி திருட்டு போனதை கண்டு சத்தம் போட்டார்.
வலைவீச்சு
இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து அருகில் உள்ள இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் மர்நபர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் அடைக்கலமேரி புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.