குளச்சல் போலீஸ் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திரண்டதால் பரபரப்பு
குளச்சல் போலீஸ் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
குளச்சல், ஜூன்.7-
குளச்சல் போலீஸ் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கட்சியினர் திரண்டதால் பரபரப்பு
குளச்சல் போலீஸ் நிலையத்தில் நேற்று மாலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி மற்றும் பலர் திரண்டனர்.
அப்போது போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது, விசாரணைக்காக அழைத்துச் சென்ற வாலிபரை விடுவிக்கக்கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்ததும் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் சம்பந்தப்பட்ட வாலிபரிடம் போலீசார் எழுதி வாங்கி விட்டு அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, த.மு.மு.க.வை சேர்ந்த ஏராளமானவர்களும் பங்கேற்றனர்.