பெருந்துறையில் விசா இல்லாமல் தங்கி இருந்த வங்காள தேசத்தை சேர்ந்த 2 பேர் கைது

முறையான விசா இல்லாமல், பெருந்துறையில் தங்கி இருந்த வங்காள தேசத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-22 21:08 GMT

பெருந்துறை

முறையான விசா இல்லாமல், பெருந்துறையில் தங்கி இருந்த வங்காள தேசத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பணிக்கம்பாளையத்தில், வீடு வாடகைக்கு பிடித்து, விசா இல்லாமல் தங்கி இருந்து வேலை செய்து வருவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், தங்கதுரை ஆகியோர் பணிக்கம்பாளையத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், 'அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வங்காளதேசத்தை சேர்ந்த சம்ஜியுமான் சர்தார் (வயது 39), முகமது அலாவுதீன் காஜி (27) ஆகியோர் தங்கி இருந்து பெருந்துறை பகுதியில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்ததும், முறையான விசா இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது.

கைது

இதைத்தொடர்ந்து முறையான அனுமதி இன்றி இந்தியாவில் தங்கி இருந்ததாக சம்ஜியுமான் சர்தார், முகமது அலாவுதீன் காஜி ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரும் பெருந்துறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 2 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு விபிஷி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்