தூத்துக்குடியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி

தூத்துக்குடியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.

Update: 2022-09-25 18:45 GMT

தூத்துக்குடியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

சிலம்பம் போட்டி

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்ப போட்டி ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி பி.எம்.சி. மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த போட்டி தொடக்க விழாவுக்கு உலக சிலம்பம் விளையாட்டு சங்க நிறுவனர் தலைவர் சுதாகரன் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜ்குமார் வரவேற்று பேசினார்.

தொடர்ந்து ஒற்றை கம்பு சிலம்ப போட்டி, இரட்டை கம்பு சிலம்ப போட்டி, வாள்வீச்சு, மான்கொம்பு சுற்றுதல், குழு போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகள் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய 3 பிரிவுகளில் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1500 சிலம்ப வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்க மகளிர் அணி தலைவி கீதா, மகளிர் அணி துணை செயலாளர் மினிஸ்ரீ, பொதுச் செயலாளர் கீதா மதுமோகன், தலைமை அமைப்பு செயலாளர் பார்த்திபன், நடுவர் குழு தலைவர் தனபால், தேசிய செயலாளர் ராஜ், மாநில துணை அமைப்பு செயலாளர் செய்யது முகமது பிலால், மாவட்ட செயலாளர் மணிகணேஷ், துணை தொழில்நுட்ப இயக்குனர் வீரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்