மாநில அளவிலான கபடி போட்டி

ஆலங்குடியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

Update: 2022-10-08 19:20 GMT

ஆலங்குடி கலிபுல்லா நகரில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டு விளையாடின. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆலங்குடி அணியினரும், கல்லணை அணியினரும் இறுதி போட்டியில் மோதினர். இதில் கல்லணை அணியினர் வெற்றி பெற்று பரிசு கோப்பையை தட்டி சென்றனர். ஆலங்குடி அணியினர் 2-வது பரிசும், சிவகங்கை அணியினர் 3-வது பரிசும், புதுக்கோட்டை அணியினர் 4-வது பரிசையும் தட்டி சென்றனர். இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இந்த போட்டிகளை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்