விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான மாநில அளவில் தேர்வு போட்டி

விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான மாநில அளவில் தேர்வு போட்டி நடந்தது.

Update: 2023-05-28 20:21 GMT

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு பயிற்சி, சத்தான உணவு வழங்குதல் கீழ்க்கண்ட நகரங்களில் விடுதிகள் நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், சென்னை, கோவை, ஊட்டி, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, தூத்துக்குடி உள்பட 17 நகரங்களிலும், மாணவிகளுக்கு ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், சென்னை, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகர்கோவில் உள்பட 10 நகரங்களிலும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த விடுதிகளில் 2023-24-ம் ஆண்டிற்கான மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு போட்டி தேர்வு கடந்த 27-ந்தேதி தொடங்கி இன்று (திங்கட்கிழமை) வரை நடைபெறுகிறது. இதில் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொண்டனர். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தடகளம் மற்றும் 6, 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக்கி போட்டிகள் தேர்வு நடைபெற்றது. இதில் நெல்லை, மதுரை, கோவில்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்