மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 21-ந்தேதி நடக்கிறது
நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெறுகிறது.
சென்னை,
மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் முதல் கூட்டம் கடந்த மே மாதம் நடைப்பெற்ற நிலையில், இரண்டாவது கூட்டம் வரும் 21-ந்தேதி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெறுகிறது.