பேட்டை:
சுத்தமல்லியில் 2-வது மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியை ரிச் ஹவுசிங் சேர்மன் ஆதி கார்த்திக், ரிச் பில்டர்ஸ் சேர்மன் கண்ணன் ஆகியோர் தொடங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். நைனா முகம்மது வரவேற்றார். போட்டியில் 12 மாவட்டத்தில் இருந்து சுமார் 420 கராத்தே வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், நெல்லை வக்கீர் பார் அசோசியேசன் செயலாளர் காமராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப் செய்திருந்தார்.