சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை - தீபாவளி வர்த்தகம் கடும் பாதிப்பு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் தீபாவளி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-30 10:47 GMT

சென்னை,

மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒருவளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் கனமழை பெய்தது. எழும்பூர், நுங்கம்பக்கம், கோடம்பாக்கம், தி.நகர், கிண்டி, கோயம்பேடு, சைதாப்பேட்டை, வேளச்சேரி, குரோம்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.


இந்நிலையில், கனமழையால் தீபாவளி வர்த்தகம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு, துணி, பூக்கள், காய்கறி, இனிப்பு வகைகள் உள்படவற்றின் வியாபாரம் இன்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


தி.நகரில் உள்ள கடைகளில் பட்டாசு, இனிப்புகள், புதுத்துணி உள்பட பல்வேறு பொருட்களை வாங்க மாலை மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கனமழையால் பொருட்களை வாங்க வரும் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது. கனமழையால் தி.நகரில் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது. கனமழையால் தீபாவளி விற்பனை மந்தமாக நடைபெறுவதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். 




 


Tags:    

மேலும் செய்திகள்