195 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல்

கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.;

Update: 2023-10-31 13:04 GMT

சென்னை, 

திருப்பணிகள் தொடங்கப்படுவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிட மாதம் இருமுறை மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (31.10.2023) மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் இணை ஆணையர் (திருப்பணி) திரு.பொ.ஜெயராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திண்டிவனம், அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சென்னை, ஓட்டேரி, அருள்மிகு சுந்தரவிநாயகர் திருக்கோயில், கிண்டி, அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளிட்ட 195 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மாநில அளவிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும்.

இக்கூட்டத்தில் ஆகம் வல்லுநர்கள் திரு.சந்திரசேகர பட்டர். திரு, கோவிந்தராஜப்பட்டர், அங்கீகரிக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஸ்தபதி முனைவர் கே.தட்சிணாமூர்த்தி. திரு.இராமமூர்த்தி தொல்லியல் துறை வடிவமைப்பாளர் முனைவர் டி.சத்தியமூர்த்தி, முனைவர் சீ.வசந்தி, கட்டமைப்பு வல்லுநர் திரு.கே.முத்துசாமி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்