தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.;
கரூரில், தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கண்ணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில், வருகிற 10-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மருத்துவத்துறை நிர்வாக ஊழியர்கள் அனைவரும் பங்கேற்பது, மருத்துவத்துறையில் காலியாக உள்ள அனைத்து நிர்வாக ஊழியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், அனைத்து நிலை நிர்வாக ஊழியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுகளும் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநில பொருளாளர் அசோகன், பொதுச்செயலாளர் நம்பிராஜன், மாநில செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.