மாநில சிலம்ப போட்டி

சங்கரன்கோவிலில் மாநில சிலம்ப போட்டி நடந்தது.;

Update: 2023-02-05 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் சிலம்பம் டிரஸ்ட் மற்றும் சிலம்பம் தற்காப்பு கலை ஆராய்ச்சி மையம் சார்பில் மாநில அளவிலான 3-வது ஆண்டு சிலம்பாட்ட போட்டி சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்த அருணாசலம் மணி ஆசான் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசெல்வம், செயலாளர் ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஆத்திவிநாயகம் வரவேற்றார். இதில் மலைவேல் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் சந்திரகுமார், அருண், ராசு செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, நெல்லை, தென்காசி, தஞ்சாவூர், கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும், கேடயமும் பரிசாக வழங்கப்பட்டது. முடிவில் மாஸ்டர் குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்