குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி நடிவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-03-17 11:21 GMT

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்ட்டில் உள்ள பாபா தெருவில் கடந்த சில நாட்களாக சாக்கடை நீர் குளம் போல தேங்கி நிற்கிறது. அறுவெறுக்கத்தக்க வகையில் உள்ள சாக்கடை நீரை கடந்து அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் தினமும் வெளியே சென்று வர வேண்டிய நிலை உள்ளது. கழிவு நீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது.

தற்போது காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த தெருவில் இது போன்ற சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் தேங்கி நிர்க்கும் கழிவுநீரை உடனடியாக அகற்றி நடிவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்