ஆசிரியைக்கு கத்திக்குத்து; மாமனார் கைது

குருபரப்பள்ளி அருகே ஆசிரியையை கத்தியால் குத்திய மாமனார் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-03-04 00:15 IST

குருபரப்பள்ளி

குருபரப்பள்ளி அருகே உள்ள பச்சிகானப்பள்ளியை சேர்ந்தவர் நிரோசா (வயது23). தனியார் பள்ளி ஆசிரியை. இவரது மாமனார் திருப்பதி (65). சம்பவத்தன்று சொத்து பிரச்சினை காரணமாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திருப்பதி, ஆசிரியை நிரோசாவை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக நிரோசா குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்