புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி

புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி நடைபெற்றது.;

Update:2023-05-05 00:20 IST

ஆலங்குடி அருகே கே.ராசியமங்களத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 25-ந் தேதி பங்கு தந்தையரின் கூட்டு பாடல் திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து கே.ராசியமங்களம் பங்குத்தந்தை செபஸ்தியான், செட்டியாப்பட்டி பங்குத்தந்தை சபரிநாதன் மற்றும் பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள் ஆகியோர் திருவிழா கூட்டுப்பாடல் திருப்பலி பூஜை நடத்தினர். பின்னர் தேர்பவனி நடைபெற்றது. நான்கு வீதிகள் வழியாக கோவிலை சுற்றி மேள தாளம், வாணவேடிக்கை முழங்க தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்